Viral Video: குட்டியைக் காப்பாற்ற ஆக்ரோஷமாக வந்த தாய்... சுற்றிவளைத்த சிங்கங்கள்! கடைசியில் டுவிஸ்ட்
தனது குட்டியை சுற்றி வளைத்த சிங்கக் கூட்டத்திலிருந்து தாய் காட்டெருமை காப்பாற்றும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கங்களை தெறிக்க விட்ட காட்டெருமை
பொதுவாக தாய்பாசம் என்றால் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டும் என்று கூறிவிட முடியாது. ஆம் ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் தாய்பாசம் உள்ளது என்பதை இக்காட்சி நிரூபித்துள்ளது.
காட்டெருமையின் குட்டி ஒன்று சிங்கங்களின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. உடனே தாய் வந்து அனைத்து சிங்கங்களையும் சமாளித்து தனது குட்டியை காப்பாற்ற முயற்சிக்கின்றது.
ஒரு கட்டத்தில் ஐந்து சிங்கங்கள் தாயையும் சுற்றி வளைத்து உயிர் பயத்தை ஏற்படுத்துகின்றது. இதில் காட்டெருமை குட்டியுடன் சிங்கத்திடம் சிக்கிக்கொள்ளுமா என்ற கேள்வி எழுகின்றது.
ஆனால் அதன் பின்பு சில காட்டெருமைகள் கூட்டமாக வந்து அனைத்து சிங்கங்களையும் தெறிக்கவிட்டு ஓட வைத்துள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
A mother's power can never be underestimate!
— The Figen (@TheFigen_) August 4, 2025
And friends came to their rescue. pic.twitter.com/F4MJ36ITEQ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |