பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்... அதிர்ச்சியடைய வைத்த காரணம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் தாய் ஒருவர் தான் பெற்ற பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை கொலை செய்த தாய்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பிரபு(30). இவரது மனைவி சகுந்தலா தேவி(21). இவர்களுக்கு மூன்றரை வயதில் மகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த ஒன்பதாவது நான் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்து வெளியே வந்துள்ளார். பின்பு வேலையை முடித்து வீட்டிற்குள் சென்ற போது குழந்தை இறந்துகிடந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொலிசார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், குழந்தையின் தலையில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த நிலையில், தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாால் தாயே குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. தற்போது குறித்த தாயை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |