வேறொருவருடன் தனிமையில் தாய்: அவதானித்த மகன் கூறிய வார்த்தை! பின்பு நடந்த துயரம்
வேறொருவருடன் தனிமையில் இருந்த தாயை மகன் அவதானித்து, தந்தையிடம் கூறுவதாக சொன்ன மகனை ஈவு இரக்கமின்றி தாய் கள்ளக்காதலுடன் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் கிராமத்தில் வசித்துவந்த துர்கா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
துர்காவின் கணவர் வெளியூருக்கு வேலை நிமிர்த்தமாக சென்றதால், மகனை அவரது தாத்தா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தனிமையில் இருப்பதை மகன் ஒருநாள் அவதானித்துள்ளார்.
இதனை தனது தந்தையுடன் கூறுவதாக தாய்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிலையில் காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்ய முடிவு செய்த தாய், தாத்தா வீட்டில் இருந்த மகனை அவனது நண்பர் மூலம் அழைத்து வந்துள்ளார்.
பின்பு கழுத்தை அறுத்து கொலை செய்து குளத்தில் வீசியுள்ளார். கடந்த 11ஆம் தேதி அழுகிய நிலையில் கோயில் குளத்தில் சிறுவனின் உடல் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தன்று சிறுவன் அவனது நண்பனுடன் சென்றதும், திரும்பி வரும் போது நண்பன் மட்டுமே வந்துள்ளதாகவும், சிறுவன் காணாமல் போனதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் இறந்து கிடந்த சிறுவன் தான் காணாமல் போன சிறுவன் என்பதை அறிந்த பொலிசார், தாயிடம் விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.