Viral Video: திருமணத்தில் மாப்பிள்ளைக்கு சிகரெட் கொடுக்கும் மாமியார்
மாப்பிளைக்கு சிகரெட் கொடுத்து வரவேற்கும் குடும்பத்தின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், சடங்குகள், சொந்தங்கள் நண்பர்களுடன் விளையாட்டு என செம ஜாலியாக அரங்கேறுகிறது தற்போதைய திருமணங்கள்.
இதன்படி, சடங்குகள் செய்து கொண்டிருக்கும் போது மாமனார், மாமியாரிடம் கொடுத்து மாப்பிளைக்கு சிகரெட் கொடுக்க சொல்கிறார். அப்போது மாமனார் பஞ்சியுள்ள பக்கத்திற்குசிகரெட்டை திருப்பி மாப்பிளையின் வாயில் வைக்கிறார்.
அப்போது மாமனார் சிகரட்டை பற்ற வைக்கிறார். மெதுவாக சிகரட் பற்ற ஆரம்பிக்கும் போது மாப்பிளை சிகரெட்டை எடுத்து மாமியார் கையில் கொடுக்கிறார். இதனை உறவினர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ திருமணத்தில் இது என்னடா கூத்து” என கலாய்த்துள்ளார்கள்.