சித்ரா தூக்கிட்ட அறையில் மின்விசிறியைப் பிடித்து கதறிய தாய்... தந்தை கையில் சிக்கிய மதுபோத்தல்! அறையில் நடந்தது என்ன?
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற அவரது பெற்றோர்கள் கதறி துடித்துள்ள காட்சி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 9ம் திகதி பிரபல தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா. இவருடன் இவரது கணவர் ஹேம்நாத் இருந்துள்ளார்.
இவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறை எண் 113 தற்போது திறக்கப்பட்டு, இருவரின் பொருட்களை எடுத்துச்செல்ல அவர்களது உறவினர்களை வரவழைத்துள்ளனர். பொலிசாரின் அனுமதியின் பெயரில் விடுதிக்கு வந்த சித்ராவின் தாய், அவரது அறையில் மின்விசிறியில் தொங்கியபடி கதறி அழுதுள்ளார்.
பின்பு சித்ராவின் உடைகள், பேன்சி பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அழுதுள்ளார். இந்நிலையில் சித்ராவின் தந்தையின் கையில் மதுபோத்தல் ஒன்று சிக்கியுள்ளது. இது எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பிய அவரிடம் ஹொட்டல் ஊழியர்கள் இதனை கொடுப்பதில்லை, வாடிக்கையாளர் கொண்டு வந்தால் அதனை நாங்கள் மறுப்பதில்லை என்று ஹொட்டல் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
பின்பு ஹேம்நாத்தின் பெற்றோர் அவரது உடைமைகளை எடுத்துக்கொண்டிருக்கையில், சித்ராவின் தாய் அவரிடம் எனது மகளின் உயிரை இப்படி பறித்துவிட்டானே.. நானும் எனது மகளும் அவ்வளவு நம்பிக்கை வைத்தோமே என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருதரப்பினரையும் அமைதி படுத்தியுள்ளனர்.