மகளுக்கு பதிலாக பள்ளிக்கு வந்த தாய்... மெய்சிலிர்க்க வைத்த காரணம் என்னனு தெரியுமா?
மகளுக்கு பதிலாக தாயொருவர் பள்ளிக்கு சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் படிக்கும் பள்ளியின் பாதுகாப்பை சோதனை செய்ய முற்பட்டுள்ளார்.
அதனால் தனது மகளுக்கு பதிலாக தானே பள்ளிக்கு செல்ல முடிவெடுத்த, 30 வயது தாய், தனது 13 வயது மகள் போன்று முடிக்கு டை அடித்துக் கொண்டும், பள்ளி சீருடை அணிந்து கொண்டும் சென்றுள்ளார்.
அந்தப் பெண் தனது மகள் போலவே ஆசிரியர்களுடனும் பேசியதால் ஆசிரியர்கள் யாரும் அதனை கண்டுபிடிக்கவில்லையாம்.
ஆனால் கடைசி வகுப்பின் போது ஆசிரியர் ஒருவர் அந்தப் பெண் தன்னுடைய மாணவி அல்ல என்பதனை புரிந்து கொண்டு கேட்டுள்ளார். அப்போது தனது மகளுக்கு பதிலாக அவரது தாய் பள்ளிக்கு வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது, பள்ளியின் பாதுகாப்பை சோதனை செய்யவே இவ்வாறு செய்ததாகவும், பள்ளி மேலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்தற்காக அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
