உயிருக்கு போராடிய தாய்: தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்! வைரல் வீடியோ
உயிருக்கு போராடிய தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் தொடர்பான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருமணம்
இந்தியா, பீஹார் மாநிலத்தில் பாலி கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமார் பூனம் வர்மா தம்பதிகளின் மகள் சாந்தினி. சாந்தினியின் திருமணத்திற்காக மணமகன் ஒருவரைப் பார்த்து கடந்த வாரம் நிச்சய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளையில் பூனம் வர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பூனம் வர்மாவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கடைசி ஆசை
இந்நிலையில், பூனம் தன் மகளுக்கு நிச்சயதார்த்தம் வைத்துள்ள நிலையில் இப்படி ஆகிவிட்டதே என கவலையில் இருந்துள்ளனர்.
இந்தவேளையில், தன் மகளிடம் உன் திருமணத்தை பார்க்க வேண்டும். இதுவே தனது கடைசி ஆசை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் கண்கலங்கிய மகள் மற்றும் உறவினர்கள் தன் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது கண்முன்பே மகளின் திருமணம் நடந்து முடிவெடுத்துள்ளனர்.
இதன்படி வைத்தியாலையில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு சிகிச்சைப் பலனிற்றி பூனம் வர்மா உயிரிழந்துள்ளார்.
मरती मां की ख्वाहिश देख ICU में हुई बेटी की शादी #Bihar #ICU pic.twitter.com/vpxDbcJbnr
— Aman Kumar Dube (@Aman_Journo) December 26, 2022
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் உருக வைத்துள்ளது.