தாய்ப்பாலூட்டும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பால் மூலமாகவே செல்கின்றது. ஆதலால் குழந்தை பெற்ற பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்தே தாய்ப்பாலில் சத்துக்கள் காணப்படும்.
தாய் உணவு குறைவாக எடுத்துக்கொண்டால், பால் சுரப்பதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதால், பாலூட்டும் தாய்மார்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக கவனம் கொள்ளவும்.
குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கின்றது. ஆகவே பாலூட்டும் தாய்மார்கள் எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் தரும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று ஏதும் இல்லை.
பழங்கள், காய்கறிகள் கலந்த சரிவிகித உணவை தெரிவு செய்து சாப்பிட்டாலே நன்றாக தாய்ப்பால் சுரக்கும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் அவசியமாகின்றது. ஆதலால் தினமும் 2 டம்ளர் பால் மற்றும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு, பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள், உலர்பழங்களை சாப்பிடவும்.
அசைவ உணவுகளில் மீன், முட்டை, கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியை எடுத்துக் கொள்ளவும்.
உடலுக்கு ஆற்றலைத் தரும் கார்போஹைட்ரேட்கள் தானிய உணவுகளில் அதிகமாக இருப்பதால், முழு தானியம் அல்லது சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவற்றில் குறைந்த அளவே கலோரி இருக்கும்.
காய்கறிகளில் கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமின்றி கீரையையும் உணவில் எடுத்துக் கொண்டால், தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும்.
மேலும் உணவில் கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள், சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்தமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வதுடன், பாதாம் மற்றும் பேரீட்சை சாப்பிடவும்.
பாலில் பூண்டு கலந்து சாப்பிடுவதும் நல்லது. தினமும் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் எடுத்துக் கொள்ளவதுடன், உடற்பயிற்சியும் செய்வதும் அவசியமாகும்.
உடற்பயிற்சி என்பது சுகப்பிரசவம் ஆனவர்கள் ஒரு மாதம் கழித்தும், அறுவை சிகிச்சை செய்பவர்கள் மருத்துவரின் பரிந்துரை பெயரில் உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |