7 வாரக் குழந்தைக்கு பாலிற்கு பதில் மதுவை கொடுத்த தாய்... கொந்தளிக்க வைக்கும் காரணம்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது 7 வாரக் குழந்தைக்கு பால் கொடுக்கும் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 வார குழந்தைக்கு மதுவை கொடுத்த தாய்
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் வசித்து வரும் பெண் தனது 7 வாரக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகப் பால் கொடுக்கும் பாட்டிலில், பாலிற்குப் பதில் மதுவை நிரப்பிக் குடிக்க வைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் கார் ஓட்டிச் சென்ற தாயை ரோந்து பணியிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
காரை நிறுத்தி காவல்துறையினர் விசாரித்த போது, குழந்தை மயக்கத்திலிருப்பது தெரியவந்த நிலையில், தாயிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்பொழுது குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மதுவை ஊற்றி பால் பாட்டிலில் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
பின்பு குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் தாயை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |