வாகன ஓட்டிகளை நடுநடுங்க வைத்த யானை: குட்டியுடன் செய்த அட்டகாசம்
உருவத்தில் மிகவும் பெரிதாக காணப்படும் யானையை பார்த்தாலே நம்மில் பலருக்கும் பயம் தொற்றும். சமீக காலமாக யானைகள் மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகி அவர்களிடம் பாசப்போராட்டம் செய்யும் காட்சியினை அதிகமாக அவதானித்து வருகின்றோம்.
தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் யானை ஒன்று தனது குட்டியுடன் கரும்பு வண்டியை நிறுத்தி கரும்பை பெற்றுக்கொண்டு உலாவரும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தனது தும்பிக்கையினால் கரும்பை சாப்பிட்டுக்கொண்டு, தனது குட்டியுடன் ஒய்யாரமாக நடைபோடும் யானையினை அவதானிக்கும் மனிதர்கள் பயத்தில் ஆங்காங்கே வண்டியை நிறுத்திக் கொண்டு நிற்கின்றனர்.
சிறிதுநேரம் நடமாடிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. காட்டு யானைகள் அவ்வப்போது சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.