Viral Video: செல்போன் பார்ப்பதை தடுக்க தாய் செய்த காரியம்! கண்ணீருடன் சிறுமி கேட்ட கேள்வி
தாய் ஒருவர் தனது குழந்தை போன் பார்ப்பதை நிறுத்துவதற்கு வித்தியாசமான முறையில் பிளான் செய்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் குழந்தைகள் செல்போனை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் இல்லாமல் சாப்பிடுவது, தூங்குவது என அனைத்து நேரங்களிலும் செல்போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்நிலையில் தாய் ஒருவர் குழந்தைக்கு தனது குழந்தைக்கு பாடம் புகட்டுவதற்காக செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த தாய், குழந்தையின் கண்ணை சுற்றி கருப்பு நிற மையை தெரியாமல் தடவி விட்டு, ஸ்மார்ட்போன் பார்ப்பதால் கண்ணை சுற்றி இவ்வாறு கருப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.
குழந்தையும் தன்னை கண்ணாடியில் பார்த்து அழத் தொடங்கியுள்ளது. இனிமேல் செல்போன் பார்ப்பியா என்று அவரது தாய் கேட்டதற்கு, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுத்துள்ளது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்டதற்கு தாயும் இல்லை கருப்பாகும் என்று கூறியுள்ளார்.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகியதுடன், லைக்குகளை பெற்று வருகின்றது. மேலும் பலர் இது சூப்பர் பிளான் என்று அம்மாவை பாராட்டவும் செய்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |