ப்ளீஸ் சார் எங்கம்மா இறந்துடுவாங்க.... பொலிசாரிடம் மண்டியிட்டு கெஞ்சிய மகன்! இறுதியில் உயிரிழந்த தாய்
இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று உத்திரபிரதேசத்தில் மிகவும் தீவிரமடைந்து வருகின்றது.
இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தவகல்கள் வந்த நிலையில், பல சம்பவங்களை காணொளியாக அவதானித்தும் வருகின்றோம்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை வெளியில் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது அம்மா உயிரிழந்துவிடுவார்கள். ஆக்சிஜன் சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று காவல்துறையினர் முன் காலில் விழுந்தபடி கெஞ்சியுள்ளார்.
ஆனாலும் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த இளைஞரின் தாயார் உயிரிழந்துள்ளார். அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
This is a really heart breaking video.
— Youth Congress (@IYC) April 28, 2021
A man is begging in front of policeman not to take a Oxygen cylinder he has arranged for his mom in Agra, UP.
This is a total inhumane act by the police.
Is this how you should treat your fellow citizens Mr Yogi ? pic.twitter.com/Z4qTqsl5rY