கொரோனா பாதிக்கப்பட்ட அம்மாவிற்கு கடிதத்துடன் மகன் அனுப்பிய உணவு! நெகிழ வைக்கும் புகைப்படம்
சிறுவன் ஒருவன் நோயினால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு உணவு சமைத்து, அதனுடன் கடிதம் ஒன்றினை வைத்து அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். அதே போன்று அவர்கள் காட்டும் பாசத்தினை பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களுக்கே அதனை திருப்பி காட்டுவார்கள்.
அந்த வகையில் நோய்வாய்ப்பட்ட தனது அம்மாவுக்கு சிறுவன் எழுதிய கடிதம் தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தாய்
சமூக ஆர்வலரான எரின் ரீட் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனது வீட்டில் ஒரு அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மகன் சிறிய டிபன் பாக்ஸில் உணவு மற்றும் கீரை தயார் செய்து அதனுடன் ஒரு கடிதத்தினையும் வைத்து அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ள சமூக ஆர்வலர்"உங்களுக்காக இதை நானே தயாரித்தேன். நன்றாக இல்லை என்றால் சாரி" என அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.
இதுவரையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ட்வீட்டை லைக் செய்திருக்கின்றனர். மேலும், நெட்டிசன்கள் அந்த சிறுவனது பாசமான நடவடிக்கையை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
Y’all I am sick with Covid and look what my son made for me and left on the table right outside my bedroom door 😭 pic.twitter.com/MotOlsZoA4
— Erin Reed (@ErinInTheMorn) February 18, 2023