முட்டையை காக்க இயந்திரத்தையே எதிர்த்து நின்ற தாய் பறவை – இணையத்தை உலுக்கும் வீடியோ !
ஒரு பறவையின் தாய்மையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தும் மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்ககளை குவித்து வருகின்றது.
குறித்த காணொளியில், பயிர் வரிசைகளுக்கு இடையில் இருக்கும் களைகளை அகற்றும் ஒரு பெரிய விவசாய இயந்திரம் செயல்பட்டு கொண்டிருக்கும் போது, அதன் ஆற்றல் எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து அனைவருக்மே தெரியும்.

ஆனால் அதற்கிடையில், அந்த இயந்திரத்தையே எதிர்த்து நிற்கும் அளவிற்கு ஒரு சிறிய பறவை தன் முட்டைகளுக்கு அருகே உறுதியாக நிற்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
தன் உடலளவில் அந்த இயந்திரத்துடன் ஒப்பிடும்போது பல மடங்கு சிறியதாக இருந்தும், அந்த பறவை ஒரு கணமும் அசையாமல் தன் முட்டைகளை பாதுகாக்க முயல்கிறது.

அச்சமும் இல்லாமல், ஆபத்தை உணர்ந்தும் பின்வாங்காமல் அது காட்டும் தைரியம், பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கிறது.
இந்த காட்சி மூலம், “தாய்மை” என்ற உணர்வு எந்த அளவிற்கு வலிமையானது என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டுள்ளது. இந்த பறவையின் தாய்மை உணர்வுக்கும் வீரத்துக்கம் இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.