24 வருடமாக ஒரே தட்டில் உணவருந்திய தாய்! இறப்பிற்கு பின் மகனுக்கு தெரியவந்த உண்மை..... கண் கலங்க வைத்த சம்பவம்
மகன் ஒருவர் தனது தாய் இறப்பிற்கு பின் அவரது தாய் கடந்த 24 ஆண்டுகளாக ஒரே தட்டில் உண்டது பற்றிய பதிவை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது.
விக்ரம் எஸ் புத்தநேசன் என்ற நபர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது தாய் சமீபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு
பின்னர் அவர் வெளியீட்ட பதிவில் “ இது என் அம்மாவின் தட்டு. 20 வருடத்துக்கு மேல் இந்த தட்டில் தான் சாப்பிட்டு வந்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு நான் 7 ஆவது வகுப்பு படித்த போது பரிசாக வென்ற தட்டில் தான் 24 வருடமாக உணவருந்தி வந்துள்ளார் எனவும் இதை எனது தாய் என்னிடம் கூட கூறவில்லை என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த தட்டின் புகைப்படத்தை பகிந்து மிஸ் யூ மா என உருக்கத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் கண் கலங்க வைத்தது மட்டுமில்லாமல், பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.
தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.
