நெயில் பாலிஷ் குடித்த 7ம் வகுப்பு மாணவி! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
புதுச்சேரியில் சகோதரிக்குள் ஏற்பட்ட சண்டையில் தாய் திட்டியதால் 7ம் வகுப்பு மாணவி நெயில் பாலிஷ் மற்றும் அதனை ரிமூவ் செய்யும் தின்னரை குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகள்களுடன் தனியாக வசித்த தாய்
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியை சேர்ந்தவர் கணிமொழி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று காலை இவரது மூத்த மகளுக்கும், 2 வது மகளுக்கும் பள்ளிக்கு கிளம்பும்போது வாய் தகராறு ஏற்பட்டடையடுத்து இருவரையும் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
இதில் மகள் 7ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீமதி மட்டும் தாயிடம் பேசாமல் கோபமாக பள்ளிக் சென்றுள்ள நிலையில், மதியம் உணவு இடைவேளையின் போது ஸ்ரீமதி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

நெயில் பாலீஷ் குடித்த சிறுமி
ஸ்ரீமதியின் தோழிகள் உதவியோடு பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஶ்ரீமதி பள்ளியின் மதிய உணவு இடைவேளியின் போது நெயில் பாலீஷ் மற்றும் அதனை ரிமூவ் செய்யும் தின்னரை குடித்தாக தெரியவந்தது.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீமதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாய் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் காவல்துறையினர்விசாரனை நடத்தி வருகின்றனர்.