உலகிலேயே அதிக இரட்டையர் பிறந்த கிராமம் எது தெரியுமா?
உலகிலுள்ள பெற்றோர்களில் சிலருக்கு மாத்திரமே இரட்டை குழந்தைகள் பிறக்கும்.
இது பரம்பரை மற்றும் மருத்துவ காரணங்களால் மாத்திரமே சாதகமாக அமையும். “இரட்டையர் நகரம்” அல்லது “இரட்டையர்களின் கிராமம்” என அழைக்கப்படும் கிராமம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் சுமாராக 450க்கும் மேற்பட்ட இரட்டைகள் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு தரவுகளின்படி சுமார் 2000 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
அந்த வகையில், உலகிலேயே அதிக இரட்டையர்கள் பிறந்த கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிசய கிராமம்
இந்தியா- கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 'கொடின்ஹி' என அழைக்கப்படும் கிராமம் உள்ளது.
இந்த கிராமம் அருகில் திருரங்கடி என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 2,000 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
உலகிலேயே மிகக் குறைந்த இரட்டையர் பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றாலும், இந்த கிராமத்தில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான இரண்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் சன்னி முஸ்லிம்கள் ஆகும்.
ஷாஃபி சிந்தனைப் பள்ளி பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இனத்தில் கணிசமான மக்கள் தொகையினர் தான் இருக்கிறார்கள். இதனால் இந்த கிராமம் திருரங்கடி நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரட்டையர்கள் அதிகமாக பிறக்க காரணம்
ஹிஸ்டரி இந்தியா படி, கொடின்ஹி இரட்டையர்களின் கிராமம் என பிரபலமாக ஆரம்பமானது. அப்போது அங்கு 550க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசித்து வந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் ஒவ்வொரு 1000 பிரசவங்களுக்கும் 42 இரட்டையர்கள் பிறந்துள்ளனர். அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகளில் சராசரி சாதனை 1000 பிரசவங்களுக்கு 6 இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.
இது தொடர்பான பல ஆய்வுகள் நடத்தப்பட்டும், சரியான காரணத்தை யாரும் கண்டறியவில்லை. கோடின்ஹியைச் சேர்ந்த பெண்கள் வெகு தொலைவில் திருமணம் செய்து கொண்டாலும் இரட்டைக் குழந்தைகளை பெறுகிறார் என அறியப்பட்டது.
மருத்துவர் விளக்கம்
மருத்துவர்களின் கூற்றுப்படி, கோடின்ஹி பகுதியில் உள்ள தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் காரணமாக இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்றும் கொடின்ஹி கிராமவாசிகள் அதிக இரட்டைக் குழந்தைகள் பிறப்பு உள்ளூர் தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் கூறப்பட்டது.
அதிக எண்ணிக்கையிலான இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் இந்த நிகழ்வு கோடின்ஹிக்கு மட்டும் உரியதல்ல, நைஜீரியாவின் இக்போ-ஓரா நகரத்திலும் இது காணப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சிறிய தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு பிரேசிலின் காண்டிடோ கோடோய் என்ற பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் முதல் இரட்டையர் சங்கமான “தி ட்வின்ஸ் அண்ட் கின்ஸ்” அசோசியேஷனும் இந்தக் கிராமத்தில் தான் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |