சாலைகள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றது தெரியுமா?
பெரும்பாலான சாலைகள் கருப்பு நிறத்தில் அமைத்துள்ளதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பு நிற சாலைகள்
நமது அன்றாட வாழ்க்கை பயணத்தில் சாலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனெனில் அலுவலகம், பள்ளி, மருத்துவமனை, கடைகளுக்கு பயணம் செய்வதற்கு அமைத்திருக்கும் சாலைகள் கருப்பு நிறத்தில் தான் இருக்கின்றது.
எதனால் சாலைகளைக் கருப்பு நிறத்தில் அமைத்துள்ளனர் என்ற கேள்வி அவ்வளவாக யாருக்கும் எழுந்திருக்காது. ஆனால் இந்த பதிவில் இதற்கான விளக்கத்தினையும், அறிவியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களும் உள்ளதையும் தெரிந்து கொள்வோம்.

சாலைகள் கருப்பு அல்லது அடர் நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் நிலக்கீல் (Bitumen) ஆகும். நிலக்கீல் என்பது சுத்திகரிப்பு செயல்முறையில் போது கிடைக்கும் விளைபொருளாகும்.
இயற்கையாகவே கருப்பு நிறத்தைக் கொண்டுள்ள இது, வலிமை, நெகிழ்த்தன்மை, நீண்டகாலம் நீடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் பெரும்பாலான சாலைகளுக்கு இதனை பயன்படுத்துகின்றனர்.
எதற்காக கருப்பு நிற சாலைகள்?
நிலக்கீல் சாலைகள் வாகனங்களின் அதிக எடை, போக்குவரத்தையும் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. கனரக வாகனங்கள் செல்லும் சாலைகள் எளிதில் பழுதடையாமல் நீடித்து இருக்கின்றது.
மேலும் இதன் செலவும் குறைவாகவே இருக்குமாம். சிறு பழுது என்றால் அதனை குறைந்த செலவில் முடித்துவிடலாம். பொருளாதார ரீதியாக நிலக்கீல் சாலைகள் அதிக நன்மையை அளிக்கின்றது.

image: shutterstock
இதில் வானிலை சார்ந்த காரணங்களும் உள்ளது. அதாவது சூரிய ஒளியை கருப்பு நிறம் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் தேங்கும் மழைநீர் எளிதில் ஆவியாகிவிடுகின்றது. இந்த சாலைகள் வழுவழுப்பு தன்னை இல்லாதததால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பினைக் குறைக்கின்றது.
இரவில் பயணிக்கும் போது வாகனத்தின் விளக்குகள் நிலக்கீல் சாலையில் மேற்பரப்பில் படும் போது மிகவும் தெளிவாக பிரதிபலிக்கப்படுகின்றது. ஆதலால் இரவு நேர பயணமும் பாதுகாப்பாக இருக்கின்றது.
குளிரான பகுதியில் கருப்பு நிற சாலைகள் சூரிய வெப்பத்தினை அதிகமாக உறிஞ்சி பனியை உருகச் செய்கின்றது.

ஆனால் அதிகமான வெப்பம் நிறைந்த சில நாடுகளில் வெள்ளை அல்லது கான்கிரீட் சாலைகள் அமைத்துள்ளனர். ஏனெனில் வெப்பத்தினை குறைப்பதற்கு உதவுகின்றது. ஆனால் இவை செலவு அதிகமாக இருப்பதாலும், பழுது பார்க்கும் போது சிக்கலாக இருப்பதால் நம் நாடுகளில் இதனை பயன்படுத்தப்படுவதில்லை.
ஆக மொத்தம் நிலக்கீல் சாலைகள் மட்டுமே உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருக்கின்றது. இதன் நீடித்த தன்மை, செலவு, வானிலை சீரமைப்பு, பாதுகாப்பு என பல காரணங்கள் தான் இதற்கு காரணமாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |