Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் சாண்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் செய்து பிரச்சனை செய்துள்ளது குறித்து விஜய் சேதுபதி தாறுமாறாக பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் இந்த வாரத்தில் மட்டும் 11 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.
மேலும் வரும் வாரத்தில் ஆதிரையின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 24 மணி நேரம் தங்க போகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

அதிலும் வாரம் முழுவதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்த சாண்ட்ராவை நண்பன் மனைவி என்றும் கூட பாராமல் விஜய் சேதுபதி பயங்கரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை... எதற்கு மா இப்படி பண்றீங்க... என கேள்வி கேட்டுள்ளார். சாண்ட்ரா இதற்கு விளக்கம் கொடுத்தும் விஜய் சேதுபதி காது கொடுக்கவில்லை.
இதே போன்று தல பதவியில் இருந்த வினோத்தையும் பயங்கரமாக பேசி கேள்வி கேட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |