உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மோசமான சாதனை
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 0-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியனானது.
இந்த போட்டியின் போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் 93வது நிமிடத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு முன்னதாக போட்டியின் 82வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரரிடம் பந்தை தடுத்து வாங்க முயன்ற போது என்சோ பெர்னாண்டஸ் கீழே விழுந்தார், இதற்காக கைகளை உயர்த்தி கோரிக்கை வைத்த போது நடுவர் நிராகரித்ததுடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், இதன் போது அவருக்கு மஞ்சள் அட்டையை காட்டினார்.

தொடர்ந்து 90வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுந்தார், இதற்காக 2வது மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
விதிமுறைப்படி 2 மஞ்சள் அட்டை பெற்றால் ரெட் கார்டு பெற்றதாக கூறி போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
இதன்மூலம் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெற்ற ரெட் கார்டுகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
1990ம் ஆண்டு இரண்டு வீரர்கள் மற்றும் 2026ம் ஆண்டு ஒரு வீரர் என மூன்று முறை ரெட்கார்டு பெற்றுள்ளது.