பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், பிறக்கவுள்ள 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் இரண்டு முறை புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
தனுசு ராசியில் புதன் சூரியனின் சேர்க்கை உருவான பின், மாத இறுதியில் மகர ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக ஜனவரி மாதத்தில் புதாத்திய ராஜயோகம் இரண்டு முறை உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகின்றது.
அப்படியாயின் இரண்டு முறை வரும் ராஜயோகத்தில் பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னெ்னன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
| - எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.
-
சில காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பணம் விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
-
வாழ்க்கைத்துணை வழியில் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
|
ரிஷபம் ராசி
| - வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.
- பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
- சிலருக்கு பல நாட்களாக வராத பணம் வரலாம்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
மகாலட்சுமி வழிபாடு நன்மைகள் அதிகரிக்கும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.
|
மிதுனம் ராசி
| - மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
-
தொடங்கும் புதிய தொழில் சாதகமான பலன் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
|
கடகம் ராசி
| - தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும்
-
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
|
சிம்மம் ராசி
| - புதிய முயற்சி சாதகமாக முடியும்.
-
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
- சரபேஸ்வரர் வழிபாடு நல்லது.
|
கன்னி ராசி
| - இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
-
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
-
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலை ஏற்படும்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
|
துலாம் ராசி
| - வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
-
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
|
விருச்சிகம் ராசி
| - திடீர் செலவுகளும் ஏற்படும்.
-
கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி பழைய வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
- நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
|
தனுசு ராசி
| - மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும்.
பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளும் நீக்கும்.
|
மகரம் ராசி
| - உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.
-
சிலருக்கு எதிர்பாராத பணவரவு, ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.
- கணவன் - மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும்.
- பைரவரை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
|
கும்பம் ராசி
| - கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
-
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்
- வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.
- சிவபெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
|
மீனம் ராசி
| - புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
-
உறவினர்கள் மத்தியில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
-
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- முருகப்பெருமானை வழிபட தடைகள் நீங்கும்
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
You May Like This Video