தங்கத்தின் விலையில் விற்கப்படும் உப்பு... அப்படியென்ன ஸ்பெஷல்னு தெரியுமா?
உலகில் மிகவும் விலையுயர்ந்த உப்பைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மூங்கில் உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பு இல்லாத சமையல் என்பதை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஒரு உணவிற்கு முழு சுவையையும் அளிப்பது உப்பு மட்டுமே. கடல் நீரிழிலிருந்து தயாரிக்கப்படும் உப்பின் விலையும் மலிவாகவே விற்படுகின்றது.
ஆனால் அரிய வகை உப்பான கொரிய மூங்கில் உப்பு உலகில் விலையுயர்ந்த உப்பாகும். ஆடம்பர மசாலா பொருளாக கருதப்படும் இந்த உப்பு ஒரு கிலோ 400 டொலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.35 ஆயிரம் ஆகும்.
மூங்கில உப்பு, ஊதா உப்பு, ஜுகியோம் என்று அழைக்கப்படும் இந்த உப்பில் அப்படியென்ன ஸ்பெஷல் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த உப்பின் செயல்முறை மிகவும் சிக்கலானதாகும். கடல் உப்பை ஒரு தடிமனான மூங்கில் தண்டில் அடைத்து, பைன் விறகுகளைப் பயன்படுத்தி அதிக வெப்பநிலையில் ஒன்பது முறை சுடுவதை உள்ளடக்கிய செயல்முறையாகும்.
எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
வழக்கமான கடல் உப்பு மூங்கில் கேனிஸ்டர்களில் அடைக்கப்பட்டு மஞ்சள் களிமண்ணால் மூடப்பட்டு, கலவை இரும்பு அடுப்பில் சுடப்பட்டு பைன் மர நெருப்பில் வறுக்கப்படுகிறது.
மூங்கில் தண்டு கொரியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து பெறப்பட்ட வளைகுடா உப்பால் நிரம்பியுள்ளது, இது சிவப்பு களிமண்ணால் மூடப்பட்டு, பைன் மரத்திலிருந்து பெறப்பட்ட விறகுகளால் சூளையில் சுடப்படுகிறது.
சுட்ட பிறகு உப்பு கட்டிகள் கெட்டியானதும், அவை வெளியே எடுக்கப்பட்டு, மற்றொரு மூங்கில் தண்டில் நிரப்பப்பட்டு, மீண்டும் சுடப்படுகின்றன. இந்த செயல்முறை ஒன்பது முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது, ஒன்பதாவது முறை சுடப்படும் போது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலைப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயல்முறை முடிந்ததும், மூங்கில் உப்பில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு படிகங்கள் காணப்படுகின்றது.
இந்த உப்பு காம்ரோஜங் சுவை எனப்படும் தனித்துவமான இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது, ஏனெனில் உப்பு மூங்கிலின் சுவையை இந்த செயல்பாட்டின் போது உறிஞ்சுகிறது.
மிகவும் அதிகமான உழைப்பு, நேரம் என எடுத்துக் கொள்ளும், இந்த செயல்பாட்டை முடிப்பதற்கு 50 நாட்களுக்கு மேல் ஆகும்.
மேலும் திறமையான கைவினைஞர்கள் உப்பை சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு உலைகளை இயக்க வேண்டும். இவ்வளவு உழைப்பும், தனித்துவமும் இருப்பதால்தான் இந்த உப்பின் விலை தங்கத்திற்கு இணையாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |