உலகிலேயே மிகவும் விலையுர்ந்த மதுபானங்கள் எவை தெரியுமா? சாப்பிட்டால் அப்படி இருக்குமாம்;
மது உடலுக்கு பல தீங்கவை விளைவிக்கும் தான். ஆனால் மதுவை சரியான அளவில் அருந்தினால் உடலுக்கு பல நன்மைகளும் உள்ளது. அதிலும் விலையுர்ந்த மதுவில் பல நன்மைகளும் அடங்கி இருக்கிறது,. விலையுர்ந்த மதுவை பற்று இங்கே பார்ப்போம்.
Tequila ley 925
டக்கீலா லே 925 இந்த பட்டியலில் முதலில் வருகிறது. இந்த மது பாட்டிலில் 6400 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஒயின் மெக்சிகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை 6400 வைரங்கள் பதித்த இந்த மது பாட்டிலை யாரும் வாங்கவில்லை.
Diva wine
இந்த ஒயின் இரண்டாம் இடத்தில் வருகிறது. ஒவ்வொரு பாட்டிலின் நடுவிலும் வெவ்வேறு வகையான அச்சு உள்ளது. இதில் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் வைக்கப்படுகின்றன. அவை பானத்தை அலங்கரிக்கப் பயன்படுகின்றன. இந்த பாட்டிலின் விலை ரூ.7 கோடியே 30 லட்சம் ஆகும்.
amanda brick meadows wine
அடுத்ததாக, இந்த மதுவின் பெயர் அமண்டா டி பிரிக்னாக் மிடாஸ் ஆகும். இது உலகின் மிக விலையுயர்ந்த ஷாம்பெயின் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த ஷாம்பெயின் பாட்டிலின் அளவு மிகப் பெரியது. இந்த ஷாம்பெயின் விலை ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமாகும். இது தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கிறது.
Dalmore
இந்த டால்மோர் 62 உலகின் விலை உயர்ந்த விஸ்கியாக கருதப்படுகிறது. இதுவரை 12 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விஸ்கி பாட்டிலின் விலை ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமாகும்.
penfolds ampoule
பென்ஃபோல்ட்ஸ் ஆம்பூல் மிகவும் விலையுயர்ந்த சிவப்பு ஒயின் ஆகும். பேனா வடிவத்தில் பாட்டிலில் வரும் இந்த மதுவின் விலை சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம்.