இந்த ஒரு பழத்தின் விலை இத்தனை லட்சமா? அரை கிலோ தங்கமே வாங்கிடலாமாம்
பணக்காரர்களே வாங்கத் தயங்கும் உலகின் மிக விலையுயர்ந்த பழத்தின் விலை எவ்வளவு தெரியுமா? உலகிலேயே விலை உயர்ந்த இந்தப் பழத்தின் விலை 50 பவுன் தங்கத்தின் விலையை விட அதிகம்! முலாம்பழத்தின் இந்த ரகம் ஜப்பானில் விளைபவை.
உலகின் மிக விலையுயர்ந்த பழத்தின் பெயர் யுபரி முலாம்பழம் (Yubari melon), இந்த பழத்தை வாங்கும் விலைக்கு ஒருவர் அரைக்கிலோ தங்கம் அல்லது நிலத்தை கூட வாங்கலாம். இந்த அளவு விலையுயர்ந்த பழம் ஜப்பானில் விற்கப்படுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அனைவருக்கும் கிடைக்காத பழம் இது. யுபரி முலாம்பழத்தின் விலை பல லட்சங்கள் தெரியுமா?
ஒரு கிலோ யுபரி முலாம்பழத்தின் விலை தோராயமாக ரூ.20 லட்சம் வரை இருக்குமாம்! ஜப்பானில் விற்கப்படும் இந்தப் பழம், சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே வாங்க முடிந்த யுபரி முலாம்பழம், விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் விற்பனைக்கு கிடைக்காது.
ஒரு கிலோ, 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பணக்காரர்கள் மத்தியில், இதற்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானின் யுபாரி பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது.
இந்த பழம், கிரீன்ஹவுஸில் சூரிய ஒளியில் வளர்க்கப்படுகிறது. இந்த முலாம்பழங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம், இந்த பழத்திற்கு புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) இருப்பது தான்.
உலகிலேயே விலை உயர்ந்த இந்தப் பழத்தின் விலை 50 பவுன் தங்கத்தின் விலையை விட அதிகம்! முலாம்பழத்தின் இந்த ரகம் ஜப்பானில் விளைகிறது.