உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேங்காய் எது தெரியுமா? பின்னணி சிறப்பு இதோ
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேங்காய் பற்றிய விபரத்தை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த தேங்காய்
வழக்கமாக நாம் சமையல்களில் பயன்படுத்தும் தேங்காய் ஒரு பக்கம் இருக்கட்டும். அனால் தற்போது உலகில் மிகவும் விலையுயர்ந்த தேங்காய் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைக்காக மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு தேங்காயை மில்லியன் கணக்கில் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் யாரை தான் வியப்பில் ஆழ்த்தாது.
இது ஒரு அரியவகை தேங்காய் இதனை கோகோ டி மெர் அல்லது "இரட்டை தேங்காய்" என்று அழைக்கிறார்கள்.
தேங்காயின் உருவாக்கம் - இந்தியப் பெருங்கடலில் உள்ள அழகிய சீஷெல்ஸ் தீவுகளில் வளரும் பனை மரத்தில் தான் இந்த சுமார் 25 கிலோகிராம் எடையுள்ள தேங்காய் விளைகிறது. இவற்றில் சிலவை 40 கிலோ கிராம் எடையை கொண்டிருக்கும். இதன் நீளம் அரை மீட்டர் ஆகும்.
கட்டுக்கதைகள் -15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மாலுமிகள் இந்த தேங்காயை முதன்முதலில் கண்டபோது, அது கடலின் அடிப்பகுதியில் இருந்து வந்ததாக வதந்திகள் பரவின.
பின்னர் மக்கள் சீஷெல்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு புதையல் என நினைத்தனர். இதை போர்த்துகீசிய ஆய்வாளர்கள் இதை "மாலத்தீவு தேங்காய்" என்று குறிப்பிட்டனர்.
பின்னர், 1700 களில், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேங்காயின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்தினர் அதாவது அது சீஷெல்ஸின் ஒரு பழம்.
என தெரியவந்தது. மற்றும் இந்த பழம் நோய்களை குணமாக்கும் ஒன்றாகவும் மற்றும் இதில் மந்திர சக்தி உள்ளது என்றும் மக்களால் நம்பப்பட்டது.
இதன் விலை எவ்வளவு? - தற்போது உலகின் விலை உளர்ந்ததாக இருக்கும் இந்த தேங்காயின் விலை ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை உள்ளது. இது சீஷெல்ஸில் உள்ள சில தீவுகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.
ஆனாலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இதுவும் உள்ளது. அதாவது தற்போது இது அழிந்து வரம் இனமாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |