உலகிலேயே நிலநடுக்கம் அடிக்கடி வரும் நாடு எது தெரியுமா? பட்டியலில் இந்தியாவும் இருக்காம்..
நில நடுக்கம் ஒவ்வொரு வருடமும் நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள்.
அதே சமயம் கோடிக்கணக்கான பெறுமதியான கட்டிடங்கள் உட்பட பல சொத்துக்களும் அழிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டால் ஒரு நாட்டில் நேரடியாகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து மற்றும் பஞ்சத்தால் ஏற்படும் வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளும் வர வாய்ப்பு உள்ளது.
அத்துடன் பூமியின் டெக்டோனிக் தகடுகள் நகர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கிறது. அந்த இடத்தில் பிளவு ஏற்பட்டு தரையில் நகரும் அலைகள் அதிக அளவில் வெளியிடும் பொழுது நிலநடுக்கம் ஏற்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் வலிமையை விஞ்ஞானிகள் அளவிடும் பொழுது, 6.4 அல்லது 7.0 போன்ற எண்களில் அளவை கொண்டு நிர்ணயிக்கிறது. 32 கிலோடன் வெடிப்புக்கு சமமானது 5.0 அளவிலான நிலநடுக்கம்.
இது நாகசாகியில் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டின் வெடிக்கும் சக்திக்கு ஏறத்தாழ சமம் எனக் கூறியுள்ளார்.
பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடு
ஒரு நாடு பூகம்பத்தால் பாதிக்கப்படுவதை நிர்ணயிப்பது அதன் புவியியல் அமைப்பாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பல ஆசிய நாடுகள் பூகம்பங்களால் எளிதில் பாதிக்கப்படலாம். சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் நிலநடுக்களால் அடிக்கடி அவதிப்படுகின்றன.
ஒப்பீட்டளவில் ஜப்பான் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பூகம்பங்களை சந்திக்கிறது.
அதே போன்று இந்தோனேசியா பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக பார்க்கப்படுகிறது. இங்கு 2,212 பூகம்ப நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸை விட மிக அதிகம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உலகளவில் மிக அழிவுகரமான பூகம்பங்கள் பற்றிய ஆய்வுகளில், சீனா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் முதல் இடங்களை பிடிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் அதிக ஆபத்தான நிலநடுக்கங்கள் இங்கு தான் பதிவாகியுள்ளது.
சீனா கடந்த 30 ஆண்டுகளில் 186 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதில், இந்தோனேசியா 166 ஆபத்தான நிலநடுக்கங்கள், ஈரான் 109 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதிக நிலநடுக்கத்தை சந்திக்கும் ஜப்பான் 98 ஆபத்தான நிலநடுக்கத்தை தான் பார்த்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 78 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதே போன்று துருக்கி 62 நிலநடுக்கங்கள், இந்தியா 58 நிலநடுக்கங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் 55 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |