உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்புகள்: நூறு பேரை கொல்லுமாம்
உலகில் இருக்கும் பாம்புகளில் எந்த பாம்புகளின் விஷம் மனிதனை அப்படியே கொல்லும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் மிக ஆபத்தான பாம்புகள்
எவ்வளவு தைரியமாக இருந்தாலும், திடீரென ஒரு பாம்பைப் பார்த்தால் பயம் ஏற்படுவது இயல்பே. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ரீதியில் எத்தனையோ மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாம்பு கடியில் இருந்து எல்லோராலும் தப்பிக்க முடியாது. பாம்பு கடியால் பாதிக்கட்டவர்கள் ஒன்று இறக்கின்றனர் அப்படி இல்லை என்றால் அவர்களின் உடலில் ஒரு பகுதி துண்டிக்கப்படுகின்றது.
எனவே நாம் பாம்பை பற்றி கொஞ்சம் அறிந்து வைத்திருந்தால் அதன் ஆபத்தில் இருந்து குறிப்பிட்டளவு தப்பிக்க முடியும்.
சுருட்டை விரியன்
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படும் ஒரு வகை பாம்பு தான் இது. மக்கள் அதிகம் தாக்கபட்டு உயிரிழப்பது இந்த பாம்பினால் தான். இந்த பாம்பு அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது, இதன் காரணமாக இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
இன்லேன்ட் டைபன்
மிகவும் விஷமுள்ள பாம்பு என்றால் அது இந்த இன்லேண்ட் தைபன் தான். இந்த பாம்பு மத்திய ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இது முக்கியமாக எலிகளை வேட்டையாடுகிறது. இந்த பாம்பின் விஷம் நூறு மனிதர்களை கொல்லுமாம். ஆனால் இந்த பாம்பால் மனித உயிருக்கு ஆபத்து வந்தது குறைவு தான் எனப்படுகின்றது. ஏனென்றால் இது மனிதர்கள் வாழும் பகுதிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளிலும், நிலத்தடியிலும் வாழ்கிறது.
கருப்பு மாம்பா
இந்த கருப்பு மாம்பா பாம்பு சும்மா சொல்ல கூடாது ஒரு சிங்கத்தையே தன்னிடம் சரணடைய வைக்கும் அளவிற்கு இதற்கு விஷத்தின் சக்தி அதிகமாகும். இந்த பாம்புகள் சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) பிராந்தியத்தில் காணப்படும். மிகவும் ஆக்ரோஷமான பாம்பாகும். பொதுவாக மனிதர்களிடமிருந்து விலகி இருக்கும் இந்த பாம்பு, ஆபத்தை உணர்ந்ததும் மின்னல் வேகத்தில் தாக்கும். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடித்த அரை மணி நேரத்திற்குள் ஒருவர் இறந்துவிடுவார்.
கண்ணாடி விரியன்
இந்திய நாகப்பாம்பு, காமன் கிரெய்ட், செதில் விரியன் பாம்புடன் ரஸ்ஸல் வைப்பரையும் சேர்த்து பிக் ஃபோர் என்று அழைக்கிறார்கள். இந்த நான்கு பாம்புகளும் இந்திய துணைக்கண்டத்தில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன. இந்த பாம்பு ஒருவரை கடித்தால் அவர் கடுமையான வலியை உணர நேரிடும். இது மிகவும் ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் செயல்படக் கூடியது. இந்தியாவில் 43 சதவீத உயிரிழப்பிற்கு இந்த பாம்பே காரணம்.
கட்டு விரியன்
பிக் ஃபோர் பாம்புகளில் ஒன்றான இந்த பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது. இந்த பாம்பு ஒருவரை கடித்தால் அவர் இறப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த பாம்பின் விஷத்தில் நியூரோடாக்சின்கள் உள்ளன. இது நம் உடலில் சேரும் போது வை தசை முடக்கம், சுவாசக் கோளாறு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும். இது மற்ற பாம்புகள், எலிகள் மற்றும் தவளைகளை உண்ணும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |