உலகில் மிக ஆபத்தான பானம் எது தெரியுமா? தவறியும் குடிக்காதீங்க..
உலகில் உள்ள எல்லா உணவுகளையும் நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனின் அதிலுள்ள சத்துக்கள், சேர்மானங்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அப்படியாயின், உலகில் மிக ஆபத்தான பானம் எது என தேடிப் பார்க்கும் பொழுது மிகப் பெரிய உண்மை தெரியவந்தது. நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் இதில் முதல் இடத்தை பிடிக்கிறது.
போலந்து நாட்டில் தயாரிக்கப்படும் போல்மோஸ் ஸ்பிரிடஸ் ரெக்டிஃபிகோவானி என்ற வகை ஓட்கா 96% ஆல்கஹாலை கொண்டிருக்கிறது. இது மனித உடலுக்கு சில சமயங்களில் விஷமாகவும் மாறலாம்.
இது போன்று வேறு என்னென்ன பானங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
1. ஆல்கஹால்
போல்மோஸ் ஸ்பிரிடஸ் ரெக்டிஃபிகோவானி என்ற வகை ஓட்காவில் மிகச் சுத்தமான ஆல்கஹால் அதிகமாக அருந்தினால் உடனடியாக பாதிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை சரியாக பார்த்துக் கொள்ள நினைப்பவர்கள் இப்படியான ஆல்கஹால்களை எடுக்காமல் இருப்பதே சிறந்தது. தினமும் சிலர் குடிப்பார்கள். இதன் விளைவால் அவர்களால் ஒரு நாள் எழுந்து நடக்கக் கூட முடியாமல் போகும். அதே சமயம் மன நல பாதிப்பு கூட ஏற்படலாம்.
2. Energy Drinks
தொடர்ந்து ஜும்களில் பயிற்சி எடுப்பவர்கள் சில Energy Drinks எடுத்துக் கொள்வார்கள். இது அவர்களின் இதயத்தில் தடுப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக அமையலாம். முடிந்தளவு இது போன்ற Energy Drinks-களை எடுத்துக் கொள்ளாத போதுமான அளவு உணவு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
3. அசுத்தமான தேநீர்
சில வகை தேநீர்கள் ஆபத்தான தேயிலை பைகள் அல்லது பிற காரணங்களால் தீங்கு விளைவிக்கும் மோசமான பானமாக மாறும். டீ பிரியர்கள் இந்த தகவலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் சில பல காரணங்களால் டீ கூட ஆபத்தை ஏற்படுத்தும் பானமாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |