மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது? எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?
மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது என்பதையும் அதற்கான காரணத்தையும் எத்தனை சதவீதம் வாழலாம் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய்
புற்றுநோய் ஒரு ஆபத்தான நோயாகும். இந்த நோய் வந்தது தெரிந்தால் கொஞ்சம் கூட தாமதிக்க கூடாது. ஒருவேளை விரைவில் புற்றுநோய் கண்டறியப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது எளிதாகும்.
புற்றுநோயின் ஆபத்து அதன் கட்டத்தைப் பொறுத்து அதிகரிக்கும் சில நேரம் குறையும். இருப்பினும், சிலர் இன்னும் சில புற்றுநோய்களைப் பற்றி அதிக பயத்தைக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் எந்த புற்றுநோய்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிர்வாழும் விகிதம் எவ்வளவு இருக்கிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.

எந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது?
மிகவும் ஆபத்தான புற்றுநோய் இது தான் இதுதான் என பிரித்து கூற முடியாது. ஆனால் கணையப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (SCLC) மற்றும் கிளியோபிளாஸ்டோமா அதாவது மூளை புற்றுநோய் ஆகியவை மிகவும் ஆபத்தானதானது எனப்படுகின்றது.
இந்த புற்றுநோய்கள் வந்தால் சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் சில ஆண்டுகளே உயிர் வாழ முடியும் அந்த அளவிற்கு இது மிகவும் ஆபத்தான புற்றுநோய்களாகும்.

எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?
- கணையப் புற்றுநோய் - நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 8.3 முதல் 13% வரை உள்ளது. சராசரியாக, ஆரம்ப கட்டங்களில் இந்த நோய் கண்டறிந்தால் 10% நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.
- கல்லீரல் புற்றுநோய் - நோயாளியின் சராசரி உயிர்வாழும் விகிதம் சுமார் 13.4 சதவீதம் ஆகும்.
- கிளியோபிளாஸ்டோமா - மூளைப் புற்றுநோய், இதன் பாதிப்பு 12.9% ஆகவும், சராசரியாக 12-18 மாதங்கள் ஆயுட்காலம் கொண்டதாகவும் இருக்கும்.
- சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (SCLC) - இதில் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 7% க்கும் குறைவு.

புற்றுநோய் அபாயத்தைக் குறைத்து நீண்ட காலம் வாழ்வதற்கான ஒரே வழி, சரியான நேரத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வதுதான்.
புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றி அறிந்து அதை பற்றிய சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் நாடி அதற்கான சிகிச்சையை பெற்று கொள்வது அவசியம்.
புற்றுநோய் விரைவில் கண்டறியப்பட்டால், நோயாளி விரைவில் சிகிச்சையைத் தொடங்கலாம். மேலும் உயிர்வாழும் வாய்ப்புகள் அதிகம் எனப்படுகின்றது. சில நேரம் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், நீங்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |