வேட்டைக்கு கிளம்பிடுச்சு.. உயிருக்கு போராட்டம்- எதிர்நீச்சல் பரபரப்பு ப்ரோமோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல் தொடர்கிறது, சமீப வாரங்களாக தர்ஷனின் திருமணம் குறித்த காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் ஜீவானந்தம்- பார்கவியை பிடிக்க பொலிசார் படையுடன் கிளம்பியுள்ளனர், ட்ரோன் கமெராவை வைத்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
உயிருக்கு போராட்டம்
மற்றொரு பக்கம் தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்திற்காக மண்டபத்தில் அனைவரும் கூடியுள்ளனர், தர்ஷனுக்கு பார்கவி அல்லது அன்புக்கரசி யாருடன் திருமணம் நடக்கும் என்பது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில், ஜனனி கேட்ட கேள்வியால் அமைதியாக அமர்ந்திருக்கிறார் குணசேகரன்.
பூசாரியாக வந்திருப்பவர் உண்மைகளை அப்படியே கூறுவதாக அறிவுக்கரசி கூறுகிறார், ஜீவானந்தம் ஆபத்தில் இருப்பதாக கூற ஜனனி அதிர்ச்சியில் உறைவதுடன் முடிகிறது.