மழைக்காலத்தில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க எழிய வழிமுறைகள்
மழைக்காலத்தில் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா ஆகியவை கொசுக்களால் பரவும். கொசுக்கள் மனிதர்களுக்கு நோய்களை பரப்பும் திறனைக் கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாகின்றன. கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, சரியான ஆடைகளை தேர்வு செய்து, முழு கை, தளர்வான ஆடைகளை அணிவது கொசு கடிப்பதைத் தடுக்க உதவும்.
கொசுக்கள் எளிதில் கடிக்க ஏதுவாக இருக்கும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். கொசு கடிப்பதைத் தவிர்க்க வீட்டில் இன்செக்ட் ஸ்ப்ரே (insect spray) பயன்படுத்தலாம்.
அதிகமாக பயன்படுத்துவது நல்லதல்ல. கொசுக்களை இயற்கையாக விரட்ட, கொசு விரட்டும் தாவரங்களான எலுமிச்சை தைலம், துளசி, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி போன்றவற்றை முயற்சி செய்யுங்கள்.
உடலில் எசென்சியல் ஆயில்களை தேய்த்தல் மற்றும் டிஃப்பியூசர்களை பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும். புதினா, எலுமிச்சை, துளசி மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகும்.
மழைக்காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் பொதுவானவையே. உங்களுக்கு டெங்கு, மலேரியா அல்லது சிக்குன்குனியா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.