ஒரே நேரத்தில் இவ்வளவு முட்டையிட்டா நோய் வராமல் இருக்குமா? இணையத்தில் வைரலாகும் கொசுவின் காணொளி
மழைகாலம் வந்துவிட்டாலே நோய்களும் வரிசையாக வந்து நிற்கும். இதற்கு முக்கிய காரணம் கொசுக்களே... கொசு என்றால் அனைத்தும் மனிதர்களை கடிப்பதில்லை. பெண் கொசுக்களே மனிதர்களை அதிகமாக கடிக்கின்றது.
கொசுவிற்கு மனிதர்களின் ரத்தம் முக்கிய உணவு கிடையாது. பெண் கொசு, தனது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே ரத்தத்தைக் குடிக்கிறது.
கொசுக்கள் ஒரே நேரத்தில் 300 முட்டைகள் வரை இடுமாம். கொசுவின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்றாலும் அதன் இனவிருத்தி அளவுக்கதிகமாகவே இருக்கின்றது.
ஆண் கொசுக்களின் வாழ்நாள் 10 நாட்கள் மட்டுமே. பெண் கொசுக்களின் ஆயுள் 40 முதல் 50 நாட்கள் ஆகும். கொசுக்கடியால் மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.
உலகில் மிகக் கொடிய விலங்காக கருதப்படும் கொசு முட்டையிட்டு நம்மில் பலரும் அவதானித்திருக்க மாட்டோம். இங்கு கொசு ஒன்று முட்டையிடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரெபேக்கா ஹெர்பர்ட் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை அவதானித்த பார்வையாளர்கள் இவ்வளவு முட்டையிட்டா எப்படி மனிதர்கள் நோய் இல்லாமல் இருப்பார்கள் என்று கூறிவருகின்றனர்.
This mosquito laying eggs.#TiredEarth pic.twitter.com/TVxorCe29N
— Rebecca Herbert (@RebeccaH2030) September 22, 2021