காலையில் யோகாசனம் செய்வது நல்லதா? பலருக்கும் தெரியாத உண்மைகள்
காலை நேரத்தில் நாம் செய்யும் செயல்கள் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக நம்மை செயல்படுவதற்கு உதவி செய்கின்றது. அதிலும் உடலையும் மனதையும் வலிமையாக்க உடற்பயிற்சி, யோகா இவைகள் மிக முக்கியமாகும்.
அந்த வகையில் காலையில் யோகாசனம் செய்வது நல்லதா? இதனால் பயன் கிடைக்குமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காலையில் யோகா
யோகாசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கின்றது. ஆகவே கணினி சார்ந்த வேலை செய்பவர்கள் கட்டாயம் யோகா செய்வதை வழக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
யோகா மூலம் நீங்கள் செய்யும் மூச்சுபயிற்சி சீரான சுவாசத்தை அளிப்பதுடன், சுவாச பிரச்சினையையும் வராமல் தடுக்கின்றது.
இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில் யோகா கட்டாயம் செய்ய வேண்டும். மேலும் அழகான உடல் வடிவத்தையும் பெறலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் கறைப்பதுடன், மூளையை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாகவும் வைககின்றது.
காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |