தூங்கி எழுந்ததும் இந்த தவறை செய்யாதீங்க... நாள்முழுவதும் ரொம்ப கஷ்டப்படுவீங்க
காலையில் நாம் தூங்கி எழும் போது செய்யும் சில செயல்கள் அன்றைய நாள் முழுவதும் நமக்கு ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்திவிடும்.
காலையில் தூங்கி எழும்பும் போது தவிர்க்க வேண்டிய விடயம்
அலாரம் அடிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு கண் விழிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதனை ஒருவாரம் வரை செய்தால் பின்பு இயல்பாகவே இத்தகைய தூக்க சுழற்சிக்கு மாறிவிடும். ஆரம்பத்தில் அலாரம் அடிக்கும் போது எழும்பிவிட்டு பின்பு அதனை ஆஃப் செய்துவிட்டு தூங்குவது கூடாது.
இரவு வெறுமையுடன் இருக்கும் உடலுக்கு ஆற்றலை அளிப்பது என்றால் காலை உணவு தான். ஆதலால் காலை உணவை தவிர்ப்பது கூடாது. கவனக்குறைவும் ஏற்படும்.
காலையில் தாமதமாக விழிப்பதால் அன்றைய தினத்தில் செய்யும் வேலைகள் தாமதமாகவே இருக்கும். இதனால் அவசர அவசரமாக செய்யும் வேலையால் மன அழுத்தம் அதிகரித்து, சோர்வு விரைவில் ஏற்பட்டுவிடும்.
செல்போன் பார்க்கும் வழக்கத்தை நிறுத்திக் கொள்ளவும். ஏனெனில் செல்போன் வெளிச்சத்தை காலையிலேயே நீங்கள் பார்த்தால் கண் சோர்வு ஏற்படும். மேலும் இவை ஒரு விதமான மன அழுத்தத்தினையும், அன்றைய நாளின் வேலைக்கும் இடையூறாக இருக்கும்.
காலையில் எழுந்ததும் காபி பருகுவதை தவிர்க்கவும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் இதயத்துடிப்பு அதிகரிக்க வழிவகுப்பதுடன், உடல் நடுக்கத்தையும் கொடுக்கும். ஆதலால் காலையில் வெதுவெதுப்பான நீர் பருகுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |