நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? காலை எழுந்ததும் படுக்கையிலேயே இதை முதல்ல செய்திடுங்க
ஒவ்வொருவருக்கும் காலை விடியல் என்பது பாசிட்டிவாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும்.
ஆனால் அதை நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான சில முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும். அப்படி நீங்களும் உங்கள் காலை விடியல் உற்சாகமாக அமைய நினைத்தால் முதல் வேலையாக என்ன செய்ய வேண்டும் என்பதை உளவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது காலை எழுந்ததும் தரையில் கால் வைப்பதற்கு முன்னால் கட்டிலில் இருந்தபடி ஸ்ட்ரெட்சஸ் செய்ய வேண்டுமாம்.
ஸ்ட்ரெட்சஸ் எனில் வெறும் சோம்பல் முறிப்பது போல் இருக்கக் கூடாது. உங்கள் உடலை நன்கு வளைத்து செய்ய வேண்டுமாம்.
அவ்வாறு செய்யும்போது கை விரல் நுனி முதல் கால் விரல் நுனி வரை அதை உணர வேண்டுமாம். முழுகவனத்தினை செலுத்தி அப்படியான ஸ்ட்ரெட்சஸ் செய்ய வேண்டும் என்கிறார்.
இவ்வாறு செய்தால் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான நம்பிக்கை, உற்சாகத்தைப் பெறுவதோடு, அன்றைய நாள் முழுவதும் அந்த உற்சாகமானது கொஞ்சமும் குறையாமல் தைரியமான மனிதனாக வைத்துக்கொள்ளுமாம். இந்த முயற்சியினை நீங்களும் செய்துபார்த்து மாற்றத்தை உணரலாமே.