உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? காலை எழுந்ததும் இந்த தவறை செய்யாதீங்க
சிறுநீரக கெடுக்கும் 5 பழக்கங்களை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரகம்
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். ரத்தத்தினை சுத்திகரிக்கும் வேலையினை செய்யும் சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமாகவே இருக்க வேண்டும்.
இன்று மாறிவரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சிறுநீரகம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றது. மேலும் ரத்தத்தினை சுத்திகரிக்கும் பணியும் தடைபடும் என்பதால் இறுதியில் உயிருக்கே ஆபத்தையும் விளைவிக்கும்.
அந்த வகையில் நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்களை குறித்து தெரிந்து கொள்வோம்
நாம் இரவு தூங்கி காலை எழும்போது தண்ணீருக்கு பதிலாக காப்பியோ அல்லது தேநீரோ குடிக்கும் போது சிறுநீரகத்தில் நம் உடலில் கழிவுகளை வடிகட்டும் பணியானது தடைபடுகிறது. ஆனால் தண்ணீர் குடிக்கும் போது அது சரியாக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது..

நம்மில் பலரும் காலை எழுந்தவுடன் சிறுநீர் கழிப்பது இல்லை, இதனால் சிறுநீரகத்தின் சுமை அதிகரிக்கிறது, நாட்கள் செல்ல செல்ல சிறுநீரக கல்லாக மாறுகின்றது.
நாம் சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்காக எடுக்கும் மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுக்காவிட்டால் அதுவும் சிறுநீரகத்தை பாதிக்கும்.

காலை உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே உடற்பயிற்சிக்கு பின்பு தண்ணீர் குடிப்பது அவசியம், இல்லையென்றால் அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
காலை உணவை சரியாக சாப்பிடவில்லை என்றால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. இதனால் கூட சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |