நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு சூப் போதும்
நமது உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முருங்கைக் கீரை சூப்பை தினமும் குடித்து வந்தாலே போதும்.
முருங்கை கீரை சூப்பின் பயன்கள்
உடம்பில் ரத்தம் குறையும் போது உடல் சோர்வு, மந்தமான நிலை மற்றும் சில உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கின்றது.
மேலும் இதில் அதிகமான இரும்பு சத்து, வைட்டமின்கள், மினரல்கள் இருப்பதால் வாரத்திற்கு இருமுறையாவது கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு சார்ந்த பிரச்சினைக்கு தீர்வ கொடுப்பதுடன், நோய் எதிர்ப்பு குறைவினால் இருக்கும் சாதாரண தலைவலி இருமல் இவற்றிற்கும் நிவாரணம் கிடைக்கின்றது.
தேவையான பொருட்கள்:
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
தக்காளி - 1
முருங்கை இலைகள் – ஒரு கப்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
நாம் வைத்திருக்கும் முருங்கை கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிளகு சீரகம் வெங்காம் தக்காளி இவற்றினை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் 6 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பின்பு அரைத்த விழுதையும் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
கடாயில் ஊற்றிய 6 டம்ளர் இரண்டு டம்ளராக வற்றியதும் சூப்பை கீழே இறக்கிவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்.