இதை தினமும் குடிங்க - நீரிழிவு நோய் இருந்த தடையமே இருக்காது
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளீர்கள் உன்றால்அதற்கு இந்த வீட்டு வைத்தியம் மிகவும் சிறப்பான நிவாரணியாக செயற்படும். பதிவை படித்து முழு விபரம் தெரிந்து கொள்ளுங்கள்.
நீரிழிவு நோய்க்கு நிவாரணம்
இன்றைய வாழ்க்கை முறையில் நீரிழிவு நோயால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இதனால் உடலின் ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன.
மக்கள் எப்போதும் தங்கள் நவீன மருந்துகளை நம்பி இருக்கின்றனர். ஆனால் நவீன மருந்துகளுக்கே டஃப் கொடுக்கும் ஒரு இயற்கை தாவரம் உள்ளது.
இது ஆயுர்வேதத்தில் ஒரு அதிசய தாவரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த தாவரம் தான் முருங்கை. முருங்கை இலைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
மேலும் பல ஆய்வுகள் அவை நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருப்பதை நிரூபித்துள்ளன. இந்த பதிவில் முருங்கை இலை கொண்டு எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

முருங்கை
முருங்கை பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இது தவிர குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து உடல் குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது.

எப்படி உட்கொள்ள வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் முருங்கை இலை தேநீர் அல்லது பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.மதிய உணவுக்குப் பிறகு முருங்கை இலைகளின் கஷாயம் அல்லது சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவில் தூங்குவதற்கு முன், முருங்கைப் பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடிக்கவும். இப்படி செய்தால் உங்கள் நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |