கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில்... நெஞ்சை கலங்கவைக்கும் சிறுமியின் காட்சி
பூகம்பம் இடிபாடுகளுக்கு நடுவில் சுமார் இரண்டு நாட்கள் சிக்கியிருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
துருக்கியை உருக்குலைத்த இயற்கை அனர்த்தம்
துருக்கி - சிரிய எல்லையை அண்மித்துள்ள காஸியான்டெப் எனும் நகருக்கு அருகாமையில் நேற்று முன்தினம் (06.02.2023) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அனர்த்ததினால் பேரழிவைச் சந்தித்த துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளது.
உயிரை பிடித்து வைத்திருந்த குழந்தை
இந்நிலையில் சுமார் 2 நாட்கள் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டுடிருக்கும் குழந்தையொன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த குழந்தையை பார்த்ததும், அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர், அதனை குடித்து விட்டு மீட்பு பணியாளரை பார்த்து சிரிக்கும் குழந்தையின் காட்சி பார்ப்போரின் இதயத்தை கலங்கவைத்துள்ளது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாக்கப்படுவதுடன், அவ்வளவு பெரிய அனர்த்ததிலும் இந்த குழந்தை மட்டும் உயிருக்கு போராடுகிறது என்றால் அது இறைவனின் சித்தம் என தங்களின் கருத்துக்களை பதிவேற்றி வருகிறார்கள்.