நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுகின்றீர்களா? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
நொறுக்குத் தீனிகள் அதிகமாக சாப்பிடும் போது உடல்நலத்தில் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரோக்கியமான உணவிற்கு முதலிடம் கொடுக்காமல் நொறுக்கு தீனிகளை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
இவற்றின் சுவையில் அடிமையாகும் பலரும் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை யோசித்து கூட பார்ப்பதில்லை.
நொறுக்கு தீனியால் ஏற்படும் பிரச்சினை
நொறுக்கு தீனியில் அதிகளவு கலோரிகள் இருப்பதால், இவை விரைவாக ஜீரணமாகி சீக்கிரம் பசி எடுக்க ஆரம்பிக்கும். இதனால் அதிகளவு சாப்பிடுவதுடன், உடல் பருமன் மற்றும் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும்.
ரத்தத்தில் LDL என்று கூறப்படும் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, HDL என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
நொறுக்கு தீனியில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், விரைவில் நீரிழிவு நோய் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் இதில் உப்பும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் ரத்த அழுத்தத்தினை அதிகரிப்பதுடன், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
நொறுக்கு தீனிகளில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், இவை பற்களில் பாக்டீரியாக்களை வளர வைப்பதுடன், பல் சொத்தை மற்றுமு ஈறு நோய்களுக்கும் வழிவகுக்கின்றது.
நொறுக்கு தீனி சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |