முள் சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிடுபவரா... உடலில் நடக்கும் அதிசயம்!
பழங்கள் என்றாலே அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பவை.
அதிக சத்து வாய்ந்தவை என அனைவருக்கும் தெரியும். ஆனால் சில பழங்கள் மூலிகை போல செயல்படுகின்றன. இப்படி மருத்துவ குண நலன்கள் கொண்ட பழங்கள் மிக குறைவே.
அதில் முள் சீத்தா பழமும் ஒன்றாகும். புற்றுநோயை தடுப்பதில் துவங்கி பல ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது. இப்போது முள் சீத்தா பழத்தின் முக்கிய நன்மைகளை பார்க்கலாம்.
புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது
பலர் இந்த பழத்தை இயற்கையான கீமோதெரபி என அழைக்கின்றனர். (கீமோதெரபி என்பது புற்றுநோய் நோயாளிகளுக்கு அளிக்கும் ஒரு வகை சிகிச்சை முறை ஆகும்).
இந்த முள் சீத்தா பழத்தையும் அதன் இலைகளையும் உண்பதன் மூலம் சுமார் 12 வகையான புற்றுநோயை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
இது ஆச்சரியமான விஷயமாகும். இது மார்பகம், நுரையீரல், கணையம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. பொதுவாக புற்றுநோய் நோயாளிகள் கீமோதெரபி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்த பழம் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோய் செல்களை கொல்வதற்கு உதவுகிறது என கூறப்படுகிறது. மேலும் இந்த பழத்தை உட்கொள்வது மூலம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.
சிறுநீர்ப் பாதை தொற்று
யு.டி.ஐ என்பது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றாகும். இது பெண்கள் பொதுவாக எதிர்க்கொள்ளும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாகும். இது அவர்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்க கூடியது.
முள் சீத்தா பழமானது இந்த பிரச்சனையை சரி செய்ய உதவக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. வைட்டமின் சி யானது சிறுநீரில் அமில அளவை பராமரிக்க உதவுகிறது.
பொதுவாக இந்த அமில அளவுகள் அதிகமாவதன் காரணமாகவே பெண்களுக்கு யு.டி.ஐ பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இனி யு.டி.ஐ பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் முள் சீத்தா பழத்தின் உதவியை நாடலாம்.
செரிமானத்திற்கு நல்லது
இந்த பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி யானது நமது செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்க கூடியது. இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளை சரி செய்ய இது உதவுகிறது. மேலும் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இது தடுக்கிறது.
இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. எனவே நீங்கள் செரிமான பிரச்சனையை சந்திக்கும்போது உங்கள் உணவாக முள் சீத்தா பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
கொழுப்பை நிர்வகிக்க உதவுகிறது
இந்த பழம் அதிகமாக நியாசினை கொண்டுள்ளது. நியாசின் உடலில் உள்ள கொழுப்பை நிர்வகிக்க உதவுகிறது. உடலில் அதிக கொழுப்புகள் சேரும்போது அது நமது இதய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது.
இதனால் இதயம் பலவீனம் அடைகிறது. மேலும் இந்த கொழுப்புகள் எடை அதிகரிப்பிற்கும் காரணமாக உள்ளது. உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த முள் சீத்தா பழம் உதவுகிறது.
எனவே அதிக கொழுப்பு கொண்டவர்கள் இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முள் சீத்தா ஒரு ஆரோக்கியமான பழமாகும். இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆனால் ஏற்கனவே உங்களுக்கு உடல் உபாதைகள் இருந்து அதற்காக சிகிச்சை பெற்று வருகிறீர்கள் எனில் இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் இதுக்குறித்து ஆலோசனை பெறவும்
