சனி பகவானின் ராசியில் சந்திரன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய டாப் 3 ராசிகள்!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் பயணிப்பார்.
கடக ராசியின் அதிபதியான சந்திரன், மனதின் காரணியாகக் கருதப்படுகிறார். சந்திரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரின் மனம் மற்றும் உணர்ச்சிகளில் வெளிப்படும்.

அந்த வகையில், சந்திரன் செப்டம்பர் 21ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். செப்டம்பர் 23ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். மகர ராசியின் அதிபதி சனி பகவான் என்பதால், சந்திரனின் இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வேலையில் அழுத்தம், அதிக செலவுகள், மனக் குழப்பம் போன்ற பிரச்சனைகளை கொடுக்கும்.
அப்படி சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கும் இந்தக் காலத்தில் எந்த ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சந்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதால், பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்திலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. இல்லையெனில், எதிர்பாராத வகையில் அதிகமான மருத்துவச் செலவுகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 6-வது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உள்ள எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எதிர்பாராத வகையில் பல்வேறு செலவுகளை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
உடல்நல விஷயத்தில் அலட்சியத்தைத் தவிர்த்து, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது.
கும்பம்

கும்ப ராசியின் 12-வது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடலாம்.
இதனால் மன அழுத்தத்திற்கும் ஆளாகக்கூடும். பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்தவரை இந்தக் காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏதேனும் ஒரு விஷயம் காரணமாக மனதளவில் வருத்தப்படக்கூடிய சூழலும் ஏற்படலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |