சந்திர பெயர்ச்சியால் உஷாராக இருக்க வேண்டிய 3 ராசியினர் இவங்க தானாம்
Chandra Peyarchi 2026: சந்திர பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் ஒரு மோசமான காலகட்டத்தை அனுபவிக்க இருக்கின்றனர்.
Chandra Peyarchi Palangal: ஜோதிடத்தின்படி, சந்திரன் கடக ராசியின் அதிபராக திகழ்கிறார். அவர் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் வரை நீடிப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் மிகவும் குறுகிய காலக்கட்டம் இருப்பவர் சந்திரன் தான்.
சந்திரன் பிப்ரவரி 21ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் பிப்ரவரி 23ஆம் தேதி வரை இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே இருந்தாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரிஷபம்: சந்திரன் ரிஷப ராசியின் 12வது வீட்டிற்கு சென்றுள்ளார். இது அவர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வேலையிடத்தில் பிரச்சனை ஏற்படகூடும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி: சந்திரன் கன்னி ராசியின் 8வது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க இருக்கின்றனர். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு வரலாம். ஆனால் அது உங்களுக்கு சவால்களை அளிக்கலாம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் சற்று காத்திருப்பது நல்லது.

விருச்சிகம்: சந்திரன் விருச்சிக ராசியின் 5வது வீட்டிற்கு சென்றுள்ளார். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். செலவு செய்வதில் கவனமாக இருக்கவும். தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். வேலைக்கு பிரச்சனை வரலாம். அதனால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |