உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு என்ன காரணம் தெரியுமா?
ரஷ்யாவில் ஆராய்ச்சி கூடத்தில் உயிரிழக்கும் ஒவ்வொரு எலிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களால் சிலை வைக்கப்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எலிகளின் சிலை
மனிதனுக்கு எற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்காக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டுபிடித்து, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படுவது எலிகளாகும்.
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதற்கட்ட மருந்துகளை எலிகளுக்கு விட்டே பரிசோதிக்கின்றனர். இப்படி செய்தால் தான் மருந்தின் செயல்திறனை கண்டுபிடிக்க முடியும்.
இதற்கான காரணம் மனித உயிர்களுக்கு ஏற்றால்போல், எலிகளின் உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணு காணப்படுகின்றது. இந்த ஆராச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான எலிகள் உயிரிழக்கின்றன.
இதற்கு நினைவுக்கூறும் அல்லது கௌரவிக்கும் வகையில், ரஷ்ய நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு, துணியை பின்னுவது போல கைகளில் ஊசியுடன் DNAவை பின்னுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது உலகளாவிய ரீதியில் கவனம் பெற்று வருகின்றது. இந்த சிலை ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள, சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |