2025 பங்குனி மாத ராசிப்பலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரகங்களின் மாற்றத்தால் ஒவ்வொரு மாதமும் பல இன்ப துன்பங்களை கடந்து வந்திருக்கின்றோம். பொதுவாகவே புதிய மாதம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால், ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டின் பங்குனி மாத ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் 12 ராசிகளுக்குமாக சாதக. பாதக பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட கணிப்பின் பிரகாரம் மார்ச் 14ஆம் திகதி சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். அத்துடன் மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களுடனுடனு இணைப்பு ஏற்படவுள்ளது. மேலும் பங்குனி மாதத்தில் மீன ராசியில் சனி பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
குறித்த கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடிய பூதாதித்ய யோகம், லட்சுமி நாராயண யோகம், மாளவிய யோகம் உள்ளிட்ட யோகங்களால் 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடய பலன்கள் குறித்து சுருக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு பங்குனி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால்,எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உங்களின் செயல் திறன் அதிகரிப்பதை பார்க்கலாம்.
இந்த காலப்பகுதியில் மன தைரியமும், திறமையும் அதிகரிக்கும். இந்த மாதத்தில் பண இழப்புகளைத் தவிர்க்க, பணம் தொடர்பான விடயங்களில் அதிக அக்கயை செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
ரிஷபம்
பங்குனி மாத ராசி பலன் கணிப்பின் பிரகாரம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான முயற்சிகளால் வேலை, தொழில் மற்றும் கல்வி தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த காலப்பகுதயில் கடினமான சூழல் மற்றும் கடின வேலைகளில் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியிகருக்கு பங்குனி மாதத்தில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தந்தையுடனான உறவு மோசம் அடைய வாய்ப்பு உள்ளது.இதனால் பேச்சுவார்த்தைகளின் போது அதிக கவனம் தேவை.
இந்த மாதத்தில் தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. பணியிடத்தில் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பங்குனி மாதம் சற்று தடைகனை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே உங்கள் ஆற்றல் மற்றும் நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு கொள்வது சிறப்பு.உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வதால் உறவு மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் தைரியத்துடன் செயல்பட்டால் ஏமாற்றம் நீங்கி வெற்றி உண்மாகும்.
உங்களின் தன்னம்பிக்கை , தைரியம் அதிகரிக்கும். பேச்சில் அதிக கவனம் தேவை. சமூகத்திலும், குடும்பத்திலும் சூழ்நிலையை உணர்ந்து செயற்படுவது சிறப்பு.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த பங்குனி மாதத்தில் முடிவெடுக்கும் அதிகரிக்கும். இதனால் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
இந்த மாதத்தில் புதிய வேலையை ஆரம்பித்தால், வெற்றி நிச்சயம்.வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் உண்மாகும் வாய்ப்பு காணப்படுகின்றது. மு
குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். உங்கள் வேலையில் அதிக தடைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
துலாம்
துலாம் ராசிக்கு நோய் எதிர் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் நடப்பதால் இவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களின் பொறுப்பற்ற செயல்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் செயல்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். சரியாக திட்டமிட்டு உழைத்ததால் இந்த காலப்பகுதியில் நிதி முன்னேற்றத்தை காண்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த மாதத்தில் ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
உங்களின் செயல்பாடுகளில் அதிக நன்மை பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.உங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது முன்னேற்றத்துக்கு நிதி ஆதாயத்தை கொடுக்கும்.
எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருப்பதால், நல்ல முன்னேற்றம் உண்மாகும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கடினமான உழைப்பு தேவைப்படும். நிதிநிலையில் ஏற்றத்தை காண்பீர்கள்.
இந்த மாதத்தில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவை எதிர்காலத்தில் நல்ல மாற்றங்களை கொடுக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த பங்குனி மாதத்தில் எந்த வேலை செய்தாலும், அதில் முன்னரை விடவும் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.
புதிய வேலைகளில் அதிக கவனத்துடன் சரியாக திட்டமிட்டு ஒழுக்கமாக செய்தாலே முன்னேற்றம் ஏற்படும் உண்மாகும்.
கும்பம்
பங்குனி மாதம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் ஸ்திரத் தன்மையையும் புதிய நம்பிக்கையையும் கொடுக்கும்.
தொழில் தொடர்பில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செயலில் அதிக கவனம் தேவை.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் அனைத்து சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
சில காரணங்களால் மன அமைதியில் பாதிப்பு ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முறன்பாடுகள் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. அதனால் பேச்சில் அவதானம் தேவை. ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |