மழைக்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
மழைக்காலங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வரிசைகட்டி வர ஆரம்பித்துவிடுகின்றது. இவை காலநிலை மாற்றத்தினால் மட்டுமின்றி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளாலும் இருக்கின்றது.
ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் மழைக்காலங்களில் நாம் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள்
மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு தயாரிப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம், தூசு போன்றவை உணவில் கலக்க வாய்ப்புள்ளது.
சமைக்காத கீரை, காய்கறி சாலட்களை மழைக்காலத்தில் சாப்பிட வேண்டாம். இவற்றில் அழுக்கு, கண்ணுக்கு தெரியாத கிருமிகள், தூசு போன்றவை இருக்க வாய்ப்பு அதிகம்.

மீதமான மற்றும் பல நாட்கள் ஆன பழைய உணவுகளைச் சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடு. மீதமான உணவுகளைச் சரியான முறையில் ஃபிரிட்ஜில் வைப்பதும் அவசியம்.
மழைக்கு இதமாக பஜ்ஜி, போண்டா என வறுத்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால், இவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

பல நாட்கள் ஆன பழைய மீன்களைச் சாப்பிடுவது வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, எப்போதும் ஃபிரெஷ்ஷான மீன்களை மட்டுமே வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
மழைக்காலத்தில் சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதும் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். இது செரிமான மண்டலத்தைப் பாதிக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |