நாய்குட்டிகளை கொல்லும் குரங்குகள்... அடிக்கடி ஏற்படும் சம்பவத்தால் அதிர்ச்சியில் ஊர் மக்கள்; காரணம் என்ன?
1 குரங்கு குட்டியை நாய்கள் சேர்ந்து கொன்றதால் பழிக்கு பழி வாங்க சராசரியாக 250 நாய்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லாவூல் கிராமத்தில், அதிகமாக நாய்களும், குரங்குகளும் வசித்து வருகின்றன. அடிக்கடி குரங்களுக்கும் நாய்களுக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு குரங்கு குட்டியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கொன்றுள்ளது. இதனால், சோகத்திலும், ஆத்திரத்திலும் உள்ள தாய் குரங்குகள் நாய்குட்டிகளை கொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
இதனால் இது வரை சுமார் 250-ற்கும் மேற்பட்ட நாய்குட்டிகளை கொன்றுள்ளன. மரங்கள் கட்டிடத்தின் மீது தூக்கி சென்று அங்கிருந்து கிழோ தூக்கி வீசிவிடுகின்றன,. கிராமத்தில் இப்போது ஒரு நாய்க்குட்டி கூட இல்லை குரங்குகளின் இந்த அதிர்ச்சிகரமான செயலால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.
குரங்குகள் வெளியூர்களில் இருந்து வந்து நாய்க்குட்டிகளைத் தேடிக் கொல்வதும் இங்கு நடக்கின்றது. என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள குரங்குகளை விரட்ட அப்பகுதியினர் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
அதை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு குரங்குகளை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இணையத்தில் மீம்ஸ்களும் பறக்க தொடங்கியுள்ளன. MonkeyVsDoge என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்., இதுவரை, புகைப்படங்களில் லங்கூர் போல தோற்றமளிக்கும் இரண்டு குரங்குகளை நாங்கள் பிடித்துள்ளோம்.
இரண்டு குரங்குகளும் பீடில் இருந்து நாக்பூருக்கு மாற்றப்பட்டு பின்னர் அருகிலுள்ள காட்டில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.
— SAY CHEESE! ?? (@SaycheeseDGTL) December 17, 2021
Dogs vs Monkeys #MonkeyVsDoge
— Vishupedia (@vishupedia) December 18, 2021
I support both of them check the next vid in the thread ?❤️ pic.twitter.com/vTl2sxKSES