சொன்னா கேட்க மாட்டியா... பெண்ணின் கையை நறுக்கென கிள்ளிய குரங்கு... வைரல் வீடியோ...!
ஒரு பெண்ணை நறுக் நறுக்கென கையை கிள்ளிய குரங்கின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணின் கையை கிள்ளிய குரங்கு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குரங்கிடம் ஒரு பெண் சாப்பிட கரும்புத் துண்டை கொடுத்தார். அந்த குரங்கு கரும்புத்துண்டை வாங்கி சாப்பிட முற்பட்டது. அப்போது, அந்தப் பெண் அந்த கரும்புத்துண்டை வெடுக்கென குரங்கிடமிருந்து பிடுங்கினார்.
உடனே, அந்த குரங்கு அப்பெண்ணிடமிருந்த கரும்புத்துண்டை பிடுங்கியது. அந்தப் பெண் மீண்டும் மீண்டும் கரும்புத்துண்டை பிடுங்க... ஒரு கட்டத்தில் அந்த குரங்கு அப்பெண்ணின் கையை நன்றாக கிள்ளியது... அப்பெண்ணின் செயலைப் பார்த்து அந்தக் குரங்கு ரொம்ப கடுப்பானது...
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குரங்கு எப்படி கிள்ளுகிறது பாருங்களே... இருந்தாலும் சாப்பிட கொடுத்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
One day he's gonna get out and get his revenge ? ? pic.twitter.com/6RKX3zrNmR
— Mike Sierra (@SLancie) March 21, 2023