செம ஸ்டைலாக மெடரோ ரயிலில் பயணித்த குரங்கு! வைரலான வீடியோ
டெல்லி மெட்ரோவில் பயணிகள் யாருக்கு தொல்லை கொடுக்காமல் அமைதியாக பயணம் செய்த குரங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தியாவின் தலைநகரான டில்லியில், மெட்ரோ ரயில் ஒன்றில் குரங்கு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
இதனை வீடியோ எடுத்த பயணி ஒருவர், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு டெல்லி மெட்ரோவுக்கு டேக் செய்தார்.
அந்த பதிவில் "ஆனந்தி விஹாரில் இருந்து துவாரகா வாலி வரை செல்லும் டெல்லி மெட்ரோவுக்குள் குரங்கு நுழைந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
*दिल्ली मेट्रो में आनन्द विहार से द्वारका वाली में बन्दर घुस आया। बन्दर का शानदार सफर।*@OfficialDMRC @DELHIMETRO pic.twitter.com/AZpk7pS49a
— Paramjit Dhillon (@Paramjitdhillon) June 20, 2021
இந்த தகவலைப் பகிர்ந்தவரை உடனடியாக ட்விட்டர் மூலமாகவே தொடர்பு கொண்ட டெல்லி மெட்ரோ நிர்வாகம், குரங்கால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை தவிர்க்க தகவல்களை சேகரித்தனர்.
பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ரயியில் பார்த்தபோது, அந்த குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இந்த வீடியோவில், தவறுதலாக ரயிலுக்குள் நுழைந்த அந்த குரங்கு, தான் வேகமாக பயணிப்பதை ஜன்னல் வழியாகக் கண்டு பதற்றமாக இருந்தது.
ஆனால் ரயிலில் இருக்கும் ஒருவரையும் அது காயப்படுத்தவோ தொல்லைகொடுக்கவோ இல்லை. அதேபோல், அதிலிருந்த பயணிகளும் குரங்கை விரட்டவோ பயமுறுத்தவோ இல்லை.
பதிலாக குரங்கு செய்துக்கொண்டிருந்ததை கண்டு ரசித்துள்ளனர். இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலர், அந்த குரங்கு தனது குடும்பத்தை இழந்து வெகு தூரமாக பயணித்ததற்கு வருத்தப்பட்டுள்ளனர்.