புலிக்குட்டிகளுக்கு புட்டி பால் கொடுத்து தாயன்பை காட்டிய குரங்கு - பலரையும் நெகிழ வைத்த காட்சி!
பொதுவாக மனிதர்களின் அன்பை விட விலங்குகளின் அன்பு மிகவும் வியப்பாக பார்க்கப்படுகிறது. அப்படி உராங்குட்டான் வகை குரங்கு ஒன்று பால் புகட்டி தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்திய பாசக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோ காட்சியில், தாய் குரங்கு 3 புலிக்குட்டிகள் சூழ மரத்தின் அடியில் அமர்ந்து உள்ளது. பின் அவற்றில் வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்றும் உள்ளது.
புலிக்குட்டிகளில் ஒன்று குரங்கை பாசத்துடன் பார்த்து நெருங்குகிறது. அதனை தாய் குரங்கு தூக்கி தலை மீது கொண்டு சென்று விளையாட்டு காட்டுகிறது.

புலிக்குட்டியும், தாய் குரங்குக்கு முத்தம் கொடுத்து தனது மிகுதியான அன்பை வெளிப்படுத்துகிறது. பின்னர் புலிக்குட்டியுடன் குரங்கு நேசத்துடன் விளையாடுகிறது.
அந்த வீடியோவில் புலிக்குட்டிக்கு தாய் குரங்கு புட்டி பால் கொடுக்கிறது. தொடர்ந்து, புலிக்குட்டியை குரங்கு அரவணைத்து கொள்கிறது.
கூடவே வந்த வெள்ளை புலிக்குட்டியையும் தூக்கி கொள்கிறது. இரு குட்டிகளையும் இரு கைகளால் தூக்கி வைத்து கொஞ்சும் காட்சிகள் அடங்கிய வீடியோ நெட்டிசன்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
Sometimes you feel like your kids belong to a different species but you’re crazy about them nevertheless! ? pic.twitter.com/rD9IGohPQq
— anand mahindra (@anandmahindra) August 7, 2022